குரு வம்சம்
மன்னர் குரு, அஸ்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னராவார். இவர் குருச்சேத்திரம் எனும் தர்மச் சேத்திரத்தில் பல்லாண்டுகள் கடும் தவம், தான, தருமங்கள் செய்த காரணத்தினால், இம்மன்னர் ஆண்ட, கங்கை ஆற்றிக்கும், யமுனை ஆற்றிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பை குரு நாடு என அழைக்கப்பட்டது.மன்னர் குருவின் மரபில் வந்தவர்கள்,
- சாந்தனு
- பீஷ்மர்
- சித்ராங்கதன்
- விசித்திரவீரியன்
- திருதராட்டிரன்
- பாண்டு
- விதுரன்
- பாண்டவர்
- கௌரவர்
- அபிமன்யு
- பரீட்சித்து
- ஜனமேஜயன்
சாந்தனு அஸ்தினாபுரத்தின் அரசன் ஆவார். கங்காதேவியை மணந்ததால் பீஷ்மர் எனும் மகனும், சத்யவதி எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் எனும் இரு மகன்கள் இவருக்கு உள்ளனர்.சாந்தனு கங்கையின் சில நிபந்தனைக்குட்பட்டு திருமணம் செய்துக்கொள்கிறான் . அந்த நிபந்தனை யாதெனில் "நான் என்ன செய்தாலும் என்னை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, கேட்டால் உடனே போய்விடுவேன் ".
கங்கை - சாந்தனு இணையரின் முதல் குழந்தை பிறந்தது முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கிடையே கங்கை முதல் குழந்தையை கங்கை நீரில் மூழ்கடித்தாள். அழகான மனைவியை இழக்க விரும்பாத சாந்தனு அமைதி காத்தான். இப்படியே கங்கை ஏழு குழந்தைகளை ஆற்றிலே மூழ்கடித்தாள். எட்டாவது குழந்தையை கங்கையில் விடும்போது சாந்தனு அழுது கூச்சலிட்டான். "நிறுத்து அவன் ஒருவனாவது வாழட்டும்" என்றான். கங்கை அவனை பார்த்து சிரித்தாள், "உங்கள் வார்த்தையை மீறிவிட்டீர்கள், நான் உங்களை விட்டு பிரிய வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் நதியில் விட்டது எட்டு வசுக்களில் ஏழுபேர், வசிட்டரின் பசுக்களை திருடிய குற்றத்திற்காக குழந்தைகளாக பிறக்க சாபம் பெற்றவர்கள். எட்டு பேரின் வேண்டுதலுக்காக நான் தாயானேன். அவர்கள் பூமியில் மிக மிகக் குறைந்த காலத்திற்கு வாழட்டும் என தீர்மானித்தேன், ஆனால் கடைசியாகப் பிறந்தவனை காப்பாற்ற முடியவில்லை, இவன் மிகவும் சிரமப்படுவான். திருமணம் செய்து கொள்ளமாட்டான். உமக்குப் பிறகு ஆட்சிக்கும் வரமாட்டான். உமக்கு அடுத்தபடியாக குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பான், ஆணாக இருக்கும் ஒரு பெண்ணின் கையால் மரணமடைவான்". உங்கள் மகனை வளர்த்து சிறந்த போர் வீரனாக்குவேன். போர் கலையில் தேர்ந்த பரசுராமனிடம் சீடனாகச் சேர்ப்பேன். மணவயதை அடைந்ததும் உங்களிடம் அழைத்து வருகிறேன்" என்று கூறி மகன் (பீஷ்மர் ), தேவவிரதனுடன் மறைந்து விட்டாள், சாந்தனு தனித்து விடப்பட்டான்.
கங்கையில் படகு ஓட்டிவந்த சத்தியவதியைக் கண்டு மீண்டும் சாந்தனு காதல் வயப்பட்டான். சாந்தனுவின் காதலை ஏற்க கங்கையைப் போன்றே அவளும் நிபந்தனை விதித்தாள். சாந்தனுவின் நாட்டை ஆட்சி செய்ய தனது வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிமை தந்தால் சம்மதிக்கிறேன் என்றாள். தேவவிரதன் (பீஷ்மர்) ஏற்கனவே அரசகுமாரனாக தயாராக இருக்கும்போது வேறு பிள்ளைகள் எப்படி முடியும். குழம்பிப் போன சாந்துனுவின் சங்கடத்தை போக்க "நான் ஆட்சியை துறக்கிறேன்" என அறிவிக்கிறான் தேவவிரதன். சத்தியவதி மீண்டும் கேட்கிறாள். "உங்கள் குழந்தைகள் என் மகனின் குழந்தைகளிடம் சண்டையிடுவார்களே எப்படி தடுப்பது தேவவிரதன் புன்னகைத்து தனது வம்ச சரித்திரத்தையே மாற்றும் முடிவு ஒன்றை எடுத்தான் எந்த வருத்தமுமின்றி "நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன், எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன், எந்தக் குழந்தைக்கும் தந்தையாகவும் மாட்டேன்" இந்த அறிவிப்பு அண்ட சராசரத்தையும் திகைப்படையச் செய்தது. வானத்து தேவர்கள் ஒன்று கூடி (பீஷ்மர்) தேவவிரதனுக்கு தன் மரணத்தை, மரண நேரத்தை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று வரமளித்தனர். (பீஷ்மர்) தேவவிரதன் பிரம்மசர்யம் அனுசரிக்க முடிவெடுத்தான். சாந்தனு வின் மறுமணம் இனிதே முடிந்தது. காலப்போக்கில் சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் என இருவர் பிறந்தனர். சிறிது காலத்திலேயே சாந்தனு மரணமடைந்தான்.
0 comments:
Post a Comment